My Places Click Here

  
இங்கு உள்ள அனைத்தும் பிற வலையுலக நண்பர்கள் எழுதியது . அவர்களுக்கு நன்றிகள் பல ...

Saturday, January 19, 2008

சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!



சிவபெருமானைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது! என்றேன் எரிச்சலுடன்.
பார்றா... கடைசியில் அவர் தலையிலும் கை வெச்சுட்டியா...ஆமா, அவர்
மேல அப்படி என்ன உனக்குப் பொறாமை? என்றாய்.
தன் உடலில் பாதியை அவர் தன் மனைவிக்குக் கொடுத்த மாதிரி, என் உடலில் சரிபாதியை உனக்குக் கொடுக்க ஆசை. ஆனால், என்னால் முடியவில்லையே. அதான்!
அதனாலென்ன... நீதான் உன் இதயத்தையே எனக்குக் கொடுத்துவிட்டாயே!
என்ன பெரிய இதயம்... அது என் கையளவு கூட இருக்காதே...
யார் சொன்னது, அது உன்னை விடப் பெரியது தெரியுமா?சும்மா சொல்லாதே!
நிஜமாப்பா! உன்னைவிட, இந்த உலகைவிடப் பெரியது உன் இதயம்!
அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தா லும், Ԧamp;#2984;ிஜமாவா?ՠஎன்றேன் நான்.
ஏன் நம்ப மாட்டேன் என்கிறாய். உன் இதயத்தை நீ எனக்குக் கொடுப்பதற்கு முன்பு, நீ அதற்குள் சென்று பார்க்கவில்லையா?
எங்கே பார்ப்பது? ஒரு ராஜகுமாரிக் காக நிர்மாணிக்கப்படும் அந்தப்புரத் துக்குள் செல்வதற்கு, அதன் காவலாளியான உனக்கு உரிமை இல்லை என்று என்னை என் இதயம் விரட்டியடித்து விட்டதே!
சரி வா... நான் உனக்கு உன் இதயத்தைச் சுற்றிக்காட்டுகிறேன் என்றாய்.
வேண்டாம்... வேண்டாம். நான் வெளியிலேயே காவல் காக்கிறேன். நீ உள்ளே போய் ஓய்வெடு. ஆமாம், நீ தூங்கும் போது, என் இதயம் துடிக்கிற சத்தம் உனக்குத் தொல்லையாக இருக்கிறதா?
ச்சே... சத்தமா அது... சங்கீதம்! என்னைத் தாலாட்டும் இசை! என்றாய்.
சரி... அது போகட்டும், என் இதயம் சுருங்கிச்சுருங்கி விரியும்போது... உன் மீது இடிக்கிறதா? என்றேன்.உன்னை மாதிரி நினைத்துவிட்டாயா உன் இதயத்தையும். அது ரொம்ப நல்ல பிள்ளை!
அப்படின்னா, நான் உன்னை அடிக்கடி இடிப்பதாக நீ தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? என் உடலில் பாதியை, நான் உனக்குத் தரத் துடிக்கிற முயற்சி தெரியுமா அது?
ஆஹா... என்ன விளக்கம்டா. இதை மட்டும் அந்த சிவபெருமான் கேட்டால், அப்படியே ஓடி வந்து... திருவிளையாட லில் என்னையே மிஞ்சிட்டீங்க பிரதர்! என்று உன்னைக் கட்டிப் பிடிச்சுப்பார்! என்றாய் சிரிப்பாக!
அவர் கட்டிப் பிடிச்சு என்ன ஆகப்போகுது. அதுக்குப் பதில் நீ என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோயேன்! என்றேன்.
ஓ... தாராளமா! என்று என்னை அப்படியே நெட்டித் தள்ளினாய். நான் பக்கத்திலிருந்த புல்லுக்கட்டின் மீது விழுந்தேன்.
அருகிலிருந்த புளிய மரத்தின் உச்சியில் அமர்ந்த படி ஆடாதடா... ஆடாதடா மனிதா! என்று உடுக்கையை அடித்தபடி பாடிக் கொண்டு இருந்தவர்... அட, நம்ம சிவபெருமான்!

எனக்கு லீப் வருடங்கள்
ரொம்பப் பிடிக்கும்
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு!

எல்லா உடைகளிலுமே
நீ கவிதைதான்
சேலை
உடுத்தினாலோ
தலைப்புடன்
கூடிய கவிதை!



நன்றி-தபூ சங்கர்

No comments:

வந்தவர்கள்