My Places Click Here

  
இங்கு உள்ள அனைத்தும் பிற வலையுலக நண்பர்கள் எழுதியது . அவர்களுக்கு நன்றிகள் பல ...

Sunday, December 21, 2008

Monday, January 21, 2008

ஆயிரங்காலத்துப் பயிர்!


அருகருகே இருக்கும் உங்கள் வயலிலும் எங்கள் வயலிலும் ஒரே நாளில் நடவு!

முதலில் உங்கள் வயலில் படையல் படைத்து, முதல் நாற்றை நட்டாய் நீ. அடுத்து எங்கள் வயல்... உன் தந்தை வந்து யாருப்பா முதல் நாத்து நடப்போறது? என்றார். எங்கள் வீட்டில் உன்னை மாதிரி பெண் யாரும் இல்லை என்பதால், வந்திருக்கிற பொம்பளயாளுக யாரையாவது நடச்சொல்ல வேண்டியதுதான் என்றேன்.
அட, என்ன ஆளுப்பா நீ என்றவர், அம்மாடி... வா... வந்து சாமியக் கும்பிட்டு நடவ ஆரம்பிச்சு வைம்மா என்றார். நீ வந்து வயலில் இறங்கி நான்கு நாற்றுகளை நட்டாய். உன் பாதம் பட்டுவிட்ட எங்கள் வயலிலும், உங்கள் வயலைப் போலவே செழித்து வளர்ந்தது நெற்பயிர். வயல் முழுவதற்கும் நானே நீர் பாய்ச்சினேன் என்றாலும் நீ நட்ட அந்த நான்கு நாற்றுகளுக்கு மட்டும் என் ஆசைகளையும் பாய்ச்சி வளர்த்தேன்.

அறுவடையன்று அறுக்க வந்த ஆட்களிடம், அந்த நான்கு கதிர்களையும் விட்டுவிட்டு அறுக்கச் சொன்னேன். ஏன் ராசா... நட்ட புள்ளையை விட்டே அறுக்கப் போறீங்களோ? என்றது ஓரமாக நின்றிருந்த ஒரு பாட்டி. நான் சிரித்து வைத்தேன். எனக்கு எல்லாந் தெரியும்... தா அங்கதான் நிக்குது அந்தப் புள்ள... கூப்பிட்டு அறுக்கச் சொல்றதுதான... என்றது பாட்டி. சும்மா இரு பாட்டி. நான் இதை விதைக்கு விட்டு... அடுத்த வருஷம் தனியா ஒரு பாத்தி கட்டி நடப்போறேன். அப்புறம் அதையும் விதைக்குவிட்டு, அதுக்கடுத்த வருஷம் இந்த வயல்பூரா நடுவேன் என்றேன்.

அடேங்கப்பா... இம்பூட்டு ஆசையா? அப்புறம் ஏன் ராசா சும்மா இருக்க. கட்டிக்கிறியானு பொட்டுனு கேட்டுற வேண்டியதுதான என்று சிரித்தது பாட்டி. அதுக்கு என்னப் புடிக்குமோ புடிக்காதோ யார் கண்டது?? என்றேன். ?அதும் சரிதான்? என்று போய்விட்டது பாட்டி.

மறுநாள் அந்த நான்கு கதிர்களையும் அறுக்கலாம் என்று வயலுக்கு வந்தபோது, அதைக் காணோம். விடிவதற்குள் யார் அறுத்தது என்று பதைபதைப்போடு நான் தேடுகையில்... மா மரத்தில் ஒய்யாரமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த உன் கையில் இருந்தன அந்தக் கதிர்கள்.

ஏய், எதுக்கு அறுத்த என்றேன் கோபமாக. ம்... வயல்பூரா அறுத்துட்டு, எதுக்கு இத மட்டும் அநாதையா விட்டீங்க... நான் நட்ட துன்னா? என்றாய். அப்படில்லாம் இல்ல என்றேன். எப்படில்லாம் இல்ல? என்னமோ என்னை பிடிக்குமோ பிடிக்காதோனு கேட்டீங்களாமே... புடிக்காமத்தான் உங்க வயல்ல இறங்கி நாத்து நட்டமாக்கும் என்றாய். உங்கப்பா சொல்லித்தான் நீ வந்தியோனு நெனைச்சேன் என்றேன்.
எங்கப்பாகிட்ட
சொன்னதே நாங்கதான், தெரிஞ்சுக்குங்க என்று கழுத்தை வெட்டியபடியே இறங்கி ஓடினாய்.

கதிரு என்று ஆனந்தமாகக் கத்தினேன் நான். அது எங்கிட்டயே இருக்கட்டும். அடுத்த வருஷம் ரெண்டு பேரும் சேர்ந்து நட்டுக்கலாம். முதல்ல என்னைக் கல்யாணங் கட்டிக்கிற வேலையைப் பாருங்க என்று ஓடி மறைந்தாய்.

திருவிழா அன்று
கோவிலில் எல்லோருக்கும்
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருந்தாய்.
அடடா...
எல்லா ஊர்களிலும்
அம்மனுக்குக்
கஞ்சி ஊற்றுவார்கள்.
எங்கள் ஊரில்
அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!

ன் உடல் முழுவதும்
சுவிட்சுகளா என்ன?
எங்கு தொட்டாலும்
விளக்கு எரிகிறதே

உன் முகத்தில்.


ந்த மேஜை மீதிருக்கும்
உலக உருண்டையின்
மாதிரி போல
நீ கூட உந்தன் மாதிரிதானோ.
உண்மையில்
இந்த உலகைப் போல
நீயும் மிகப் பெரியவளோ.

தபூ சங்கர்

கண்ணெதிரே தோன்றுவாள்!


ஊருக்குள் இது ரொம்ப நாள் பழக்கம்!
நல்ல காரியங்களுக்காக வீட்டைவிட்டு யார் கிளம்பினாலும், எதிரில் உன்னை வரச் சொல்லி... உன் முகம் பார்த்துவிட்டுக் கிளம்புகிற கிராமம் இது. நீயும் யார் கூப்பிட்டாலும், முகம் நிறைய புன்னகையோடு மகாலட்சுமி மாதிரி எதிரில் வருவாய்.
உன் பாட்டியும் தாத்தாவும் பஞ்சம் பிழைப்பதற்காக இந்தக் கிராமத்துக்கு வந்தபோது, என் தந்தைதான் உங்களைக் கோயில் நிலத்தில் குடிசை போட்டுக்கொள்ள அனுமதித்தார்.

கொஞ்ச நாட்களிலேயே... நீ கோயிலைச் சுற்றி மண்டிக்கிடந்த புதர்களை வெட்டி எறிந்து நந்தவனமாய் மாற்றினாய். கோயிலுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது. உனக்கு முகராசிக்காரி என்கிற பட்டமும் கிடைத்தது.

கோயிலுக்கு பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி எங்கள் வீடு வருவாய். இன்றும் அப்படித்தான்... அதிகாலையிலேயே குளித்து முடித்த ஈரம் காயாமல் வந்திருந்தாய், உன் பாட்டியோடு.
உங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு என் தந்தை உள்ளே போயிருந்தபோது... கொய்யா மரத்திலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. ஓடிப்போய் அந்தப் பூவைக் கையில் எடுத்த நீ அச்சச்சோ... விழுந்துட்டியா... அணில் தள்ளி விட்டுச்சா... என்றாய். பின்னர், அந்தப் பூவை அதன் மரத்தடியில் வைத்து கவலைப் படாதே... நீ காயாகி, பழமாகி யாருக்கோ உணவாவதை விட, நீ பூத்த மரத்துக்கே உரமானா
ல், உனக்கு சொர்க்கமே கிடைக்கும் என்றபடியே, அதனை மண்ணிட்டு மூடினாய்.

உள்ளிருந்து என் தந்தை வந்து கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு உன்னைப் போகச்சொன்ன பாட்டி... தனியாக என் தந்தையிடம்... நாங்க கண்ணை மூடுறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்துடணும். அதுக்கு நீங்கதான் தயவு பண்ணணும் என்று கண்கலங்கினார். அட... இதுக்கு போய் அழுதுட்டு? நான் பாத்துக்கறேன் ஆத்தா... நீங்க போங்க! என்று உன் பாட்டியை அனுப்பிய என் தந்தை, கணக்குப்பிள்ளையை அழைத்து அந்தப் பொண் ணுக்கு ஒரு நல்ல பையனாப் பாருங்க... நாமளே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்றார்.

நான் என் தந்தைக்கருகில் போய் தயக்கத்துடன் உங்களுக்கு சரினுபட்டா... நானே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேம்ப்பா என்றேன். என் தந்தையோ பெரும் புகைப்படமாய் இருந்த என் தாயைப் பார்த்து... பார்த்தியா உன் பையனை! என்று என்னை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.
மாலையே உன்னைப் பெண் கேட்க அப்பா கிளம்புகையில், உன்னோடு விளையாட நினைத்த நான், நீ எதிரில் வந்தால்தான் வருவேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு உனக்காகக் காத்திருந்தேன்.
சற்று நேரத்தில்... வெட்கம் புடைசூழ நீ வந்தாய், உன் பாட்டியோடு.
உன் எதிரில் வந்து நின்ற நான் உன்னைப் பெண் கேட்க எங்கப்பா உன் வீட்டுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா ரோட்டுல சுத்த
ிட்டிருக்க! என்றேன் சிரிக்காமல்.
பாருங்க பாட்டி என்று நீ உன் பாட்டிக்குப் பின்னால் ஓடி ஒளிந்தாய்.
உன் பாட்டி சந்தோஷத்தில் கை கூப்பினார். உன் கண்களிலோ நீர்.
நீங்கதான் பாட்டி சந்தோஷப்படறீங்க... ஆனா, உங்க பேத்திக்குப் பிடிக்கல போலிருக்கே... அழுதே! என்றேன்.
அய்யய்யோ... நான் அழல! என்றுவேகவேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாய்.
இந்த ஊரில் எல்லோருமே அதிர்ஷ்டத்தை எதிரில் வரச் சொல்லிவிட்டு... கடந்து கடந்து போய் விட்டார்கள். எனக்குத்தான் அந்த அதிர்ஷ்டத்தைக் கட்டிக்கொள்கிற அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!

நீ பூவரசம் இலையில்
பீப்பி செய்து ஊதிப் பார்த்து
குழந்தைகளுக்குக் கொடுத்தாய்.
அருகில் இருந்த மூங்கில் மரங்கள்
கண்
ணீர்விட்டுக் கதறின.

நீ முகம் கழுவுகையில்
ஓடிய தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும்
இவ்வளவு அழகையா
வேண்டாமென்று
நீ நீரில் விடுகிறாய்.

தபூ சங்கர்

ஆசையா... மோகமா... அதையும் தாண்டி காதலடி!



யில் கலைந்து எழுந்து குளிக்கக் கிளம்பும் உன்னைத் தடுப்பதே, ஒவ்வொரு காலையும் அழகான போராட்டமாகிப் போகிறது எனக்கு.
குளித்து சுத்தமாகத்தான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு... எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.

ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்... நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்... பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கிற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்... அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?

தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி இது புதிய முகமோ? என்கிற ஆச்சரியத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்... நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?

குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்.. சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! அய்யோ... இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே! என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!
போதும்... போ
தும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன் என்று திருவாய் மலர்ந்தாய்.
??அய்யோ... இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்திரியடி!?? என்றேன்.
ஆ... எனக்கு மயக்கம் வருது என்று சிணுங்கினாய்.
உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணிநேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.

?இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே! என்றாய்.
அடிப்பாவி.. இது ஆசையா... மோகமா... அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே... கொஞ்சம் இறங்கி வந்து, காதல் என்பது காலத்தை வென்றது என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.

ன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன்
பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.

ரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.

நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.

கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.

தபூ சங்கர்-

கிளியோபாட்ரா... மயிலோபாட்ரா!


ஆறு வருடங்களுக்கு முன்பு, முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நான் இந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது, இந்தக் கல்லூரியைப் பற்றி வெளியே பரவிக்கிடக்கும் புகழைவிட நூறு மடங்கு அதிகமாக, இந்தக் கல்லூரிக்குள் உன் புகழ் பரவிக்கிடக்கிறது என்பது.
அதோ மகா வாசல் தெளிக்கிறாடா என்று ஒரு கும்பல் ஓடும். இதோ மகா கோலம் போடுறாடா என்று இன்னொரு கும்பல் ஓடும். டேய்... மகா ஸ்கூல் கௌம்பிட்டாடா என்று ஒரு கூட்டம் கூடும். அத்தனை யையும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கல்லூரியெங்கும் அழகழகாய் பெண்கள் சுற்றிக்கொண்டிருக்கையில், இந்தக் கல்லூரியே ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறது என்றால், அப்படியென்ன கிளியோபாட்ரா அவள்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டு... அதையும்தான் பார்த்துவிடுவோமே!ՠஎன்று உன்னைப் பார்க்கக் கிளம்பினேன்.

கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் மகள்தான் நீ என்பதையும் கல்லூரிக்குள்ளேயேதான் உன் வீடிருக்கிறது என்பதும் தெரிய வர, நீ ஸ்கூல் கிளம்பும் தரிசனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த எங்கள் சீனியர் கூட்டத்துக்குப் பின்னால் ஜூனியர்கள் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
உன்னைப் பார்த்தவுடன், எலேய்... இவ வெறும் கிளியோபாட்ரா இல்லடா... பஞ்சவர்ணக்கிளியோபாட்ரா என்று கிசுகிசுத்தபடி உன் பின்னா லேயே போனது எங்களில் ஒரு கூட்டம். கிளியா இது? மயில்டா... மயிலோபாட்ரா என்று கிறங்கியபடி மிச்சக் கூட்டமும் உன் பின் தொடர்ந்தது.

எனக்கும் ஆசை. ஆனால்... ச்சே, இத்தனை பேர் சுற்றும் பெண் பின்னால் நாமும் சுற்றுவதா என்று ஒரு சின்ன ஈகோ. அதற்காக உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? நீ வரும் போதும் போகும்போதும் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லையே! என்பது மாதிரி உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால், அன்று திடீரென உன் அம்மா என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்தச் செய்தி கேட்டு கல்லூரியே கொதித்துப் போய்விட்டது. இதுக்குடா? என்றும் இப்படிடா? என்றும் என்னைக் குடைந்தெடுத்து விட்டார்க
ள் என் நண்பர்களும் சீனியர்களும்.
?உன் கையெழுத்து நல்லாருக்குன்றதால தான் உன்னைக் கூப்பிட்டேன். தினமும் சாயங்காலம் வந்து நான் எழுதற ப்ராஜெக்டைக் கொஞ்சம் காப்பி பண்ணித் தர்றியாப்பா? என்றார்உன் அம்மா.
மௌனமாகத் தலையாட்டினேன். ஆனால் மனசோ டேய், உன் கையெழுத்து மட்டுமில்ல.. தலையெழுத் தும் நல்லா இருக்கு! என்று குதித்தது. அதன் பிறகு வந்த நாட்கள்... உன்னை மிக மிக அருகில் பார்த்த நாட்கள்... எல்லாம் காதல் என்னைக் கட்டித் தழுவிய நாட்கள். ஆனால், எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், கழிந்து போயின மூன்று வருடங்கள்.
படிப்பு முடிய முடிய, உன்னைக் காதலித்தவர் களெல்லாம் தங்களின் காதல்களைப் புதிதாக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறி னார்கள். நீ எப்போதும் போலயாரையும் காதலிக்காமலேயே இருந்தாய். எனக்குப் படிப்பு முடிந்தபோது எல்லோரையும் போல என்னால் வெளியேறிவிட முடியவில்லை. அங்கேயே தொடர்ந்தேன். அங்கேயே ஒரு ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொண்டேன்.

இடையில் நீயும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இந்தக் கல்லூரியிலேயே சேர்ந்தாய்.
உன் வீட்டை நான் கடக்கும்போது உன் அம்மா பார்த்துவிட்டால், உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்படியே போயின இரண்டு வருடங்கள்.
உனக்குக் கல்லூரிப் படிப்பு முடியப் போகிற ஒரு நாளில், உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் தயக்கத்துடன் உன்னைப் பெண் கேட்டேன், தன்னந்தனி ஆளாக.
எதுவும் பேசாமல் என்னை ஒரு பார்வை பார்த்த உன் அம்மா, உள்ளே இருந்த உன்னை அழைத்து
உன்னை
ப் பெண் கேக்கறார்... என்ன சொல்ல? என்றார்.
நீயோ முடியாதுனு சொல்லிடுங்க என்று சட்டென உள்ளே போனாய். அடிபட்ட பறவைபோல சிறகொடிந்து போனேன். நான் கேட்டது தப்புனா என்னை மன்னிச்சுடுங்க என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.

நில்லுப்பா என்ற உன் அம்மா, என்ன பையன்ப்பா நீ... உன்னை என் பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகுது. அவளுக்குக் கெடைச்ச டாக்டர் ஸீட்டைக்கூட வேண்டான்னுட்டு அவ இங்க படிக்கிறதே உனக் காகத்தான்...? என்றார். ஒரு கோடி கிதார் நரம்புகள் ஒரே நேரத்தில் மீட்டப்பட்டது போலிருந்தது எனக்குள். ஏம்மா... அவருக்கும் என்னைப் பிடிக்குமாம்மா..??னு ஆயிரம் தடவைக்கு மேல எங்கிட்ட கேட்டுட்டா. அவகிட்டே இன்னும் நீ உன் காதலையே சொல்லாம, திடீர்னு கல்யாணத்தைப் பத்திப் பேச வந்தா, அவளுக்குக் கோபம் வராதா பின்னே? என்று சிரித்தார் உன் அம்மா.

பரவசமாய் ஓடிவந்து உன் முன் நின்றேன். இத்தனை வருஷமா என்னை ஏன் தவிக்கவிட்டீங்க? என்று அழுதாய்... அடித்தாய். நான் உன் விரல் பற்றினேன். என் ஆறு வருடக் காத்திருப்பும் உன் காலடியில் நொறுங்கியது. உன் கண்ணீர் அதை ஆசீர்வதித்தது!

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

ழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?

தபூ சங்கர்-

பொம்மிம்மா!


என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!

பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து... தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!

என் கல்லூரி விடுமுறை நாட்களில், அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்... என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்... அந்தத் திருமணத்தில் இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால்... ஆனால்... என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.

என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி... நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.

சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.

அடுத்து வந்த பொங்கல் திருநாளில்... உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.

பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல் போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.

வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.

ஒண்ணும் வேணாங்க... பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.

சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்... பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?

கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து, வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.

ஆமாம் என்றேன்.

அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.

அடடா! என்றேன்.

ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க... அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.

தெரியுமா? என்றேன் வியப்பாக.

எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு Ԧamp;#2990;னசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சிக்கிட்டு... ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்கՠஎன்று கிள்ளினாய். ஆஹா... ராணி வம்சக் கிள்ளல் அது.

மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன். மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.

அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.

பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்...

குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை

ன்று
காதல் ஜெயந்தி
முழிக்காதே....
இன்று உன் பிறந்தநாள்.

தபூ சங்கர்

கடவுளைக் கொஞ்சம் கண்டித்து வை!


ப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.

எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.

ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!

இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை, ?என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே! என்று.

தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?

ரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!

ந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்தூக்கிப் போட்டுவிடு.

அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது!

ர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?

நீ சொம்பில் நீரெடுத்து
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னை நானே...

யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!

தபூசங்கர்

காதல் ஜல்லிக்கட்டு..!



மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச் சொல்லுவார்.

நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில் இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய்.

பொங்கலன்று... நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன். நீயும் வந்தாய். வீட்டின் ஒவ்வொரு அறையாக உனக்குக் காட்டிவிட்டு, என்னுடைய அறை இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்து வந்தேன்.

அதில், அப்போதுதான் தரைப் பூச்சு முடிந்திருந்தது. நான் வெளியே நின்றுகொண்டு, இதுதான் என் அறை. உள்ளே போய்ப் பார்!ՠஎன்றேன்.

உள்ளே காலடி எடுத்து வைத்த நீ, உன் பாதம் ஈரத்தரையில் பதிந்ததைப் பார்த்துவிட்டு, அச்சச்சோ... என்று பதறினாய்.

பதறாதே... உன்னை அழைத்து வந்ததே அதற்குத்தான்! என்றேன்.

நீ வெட்கத்தைக் கொட்டிவிட்டு ஓடிப் போனாய். உன் வெட்கத்தில் என் வீடு சுபிட்சம் அடைந்தது. ஆனால், அடுத்த நாள் நடந்த ஜல்லிக்கட்டில்... இந்தக் காளையை அடக்குபவருக்குத் தான் என் பெண்! என்று உன் தந்தை அறிவித்ததைக் கண்டு, நான் பதறிப் போனேன்.

நீ வளர்த்த அந்தக் காளையை அடக்க, யார் யாரோ பாய்ந்தார்கள். ஆனால், அனைவரை யும் புரட்டி எடுத்து விட்டது உன் காளை!

கடைசியில், நான் இறங்கப் போனேன். நீ கொஞ்சம் பொறு! என்று ஜாடை செய்துவிட்டு, உன் ரிப்பனில் ஒன்றை உருவி, ஒரு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாய், ரகசியமாக!

அதை வாங்கிக்கையில் கட்டிக்கொண்டு இறங்கிய என்னிடம் உனது காளை அடங்கிப்போனது! அது உன் வாசத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை அறியாமல், என் வீரத்தை மெச்சினார்கள் ஊர்மக்களும் உன் அப்பனும்!

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.

நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

தபூசங்கர்

Saturday, January 19, 2008

இதோ எந்தன் தெய்வம்..!



நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை.
உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, Ԕஉங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார்.
நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.
உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே நீ ஐயோ என்று முகத்தை மூடிக்கொண்டு, கோயில் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாய்.
நான்உன் அருகில்வந்து, நேரமாகிவிட்டது... வா, போகலாம்! என்றேன்.
நான் வரலை! என்று சிணுங்கினாய்.
ஐயையோ... நீ இங்கேயே இருந்துவிட்டால், இங்கிருக்கும் தெய்வம் எங்கே போவது? வேண்டுமென்றால் சொல்... இதைவிட அழகிய கோயிலாக, நான் கட்டித் தருகிறேன்!என்றேன்.
ஐயோ அப்பா... என்னைக் காப்பாத்துங்கப்பா! என்று கத்தியபடியே எழுந்து ஓடிப்போய், உன் தந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாய்.
உன் தந்தை போதும் என்று கண்டிப்புடன் சொன்னாலும், தன் பெண் நல்ல பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்கிற பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடியது.
நான் பெருமகிழ்ச்சி கொண்டு, கோயிலுக்குள் இருக்கும் தெய்வத்தைத் திரும்பிப் பார்த்தேன்.
தெய்வமோ, என் சந்நிதானத்தில் என்ன விளையாட்டு இது? என்பதுபோல் பொய்க்கோபம் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது.

நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவது தான்
எனக்குத் திருவிளையாடல்.



அற்புதமான காதலைமட்டுமல்ல
அதை உன்னிடம்சொல்ல
முடியாத அதி
அற்புதமானமௌனத்தையும்
நீதான் எனக்குத்தந்தாய்.
அன்று
நீ குடைவிரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழைநின்றால்
நீ எங்கோ
குடைவிரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.


தபூசங்கர்

ஒரு ஊரில் ஒரு தேவதை...!



நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயே அழகான இடம்.
திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து... வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள்.
ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம் நாங்கள். தேர் கூடவே நான்கு வீதிகளும் வருவாய் நீ. அப்போதெல்லாம்... ஐம்பது பேர் வடம்பிடித்து இழுத்துப்போகும் தேரிலிருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு... ஐந்நூறு பேரின் இதயங்களை இழுத்துப்போகும் உன்னை மட்டுமே தரிசிக்கும் எங்கள் கண்கள்.
ஆனால்... உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயாம்.கேள்விப்பட்டு... அதிர்ச்சியில் ஊரே உறைந்துபோய்விட்டது. அப்புறம் நீ எங்கோ வாக்கப்பட்டும் போய்விட்டாய்.
வாழாவெட்டியாகிவிட்டது ஊர்!
புத்தர் இந்த உலகத்தில் தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்துக் கொடுத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்துக் கொடுத்துவிட்டாய்

என் மனதைக் கொத்தி கொத்திகூடு
கட்டிகுடியும் ஏறிவிட்டமனங்கொத்திப்
பறவை நீ

நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும்
என்கிறஞாபகம் கூட எனக்கு வரவில்லை.
உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிடநீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?
கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூடஇருந்துவிட முடியும்!
ஆனால்,நீ குடியிருக்க வீடாக இருப்பதுமுடியவே முடியாது என்பதைநிரூபித்துக்கொண்டே இருக்கிறது
நீ குடியிருக்கும்என் இதயம்!
காதல்தான்நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்என்னைக்
கேட்காமலிருக்கட்டும். என் தவத்தைவிடச்சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வத்தாலும்தந்துவிட முடியாது!
ஒரே ஒரு முறைதான்
எனினும்உன் உன்னத நிழல்என்
மீது பட்ட போதுதான்நான்
ஒளியூட்டப்பட்டுக்கவிஞனானேன்!
நன்றி-தபூசங்கர்

அழகு தீர்ந்தால் காதல் தீருமா?



என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய்.
உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன்.
என் அழகால் உனக்கு என்ன பயன்??
அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்!
இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.
சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் அழகு செய்யும் மாயங்களைச் சொல்ல முடியும்?சொல்லு... சொல்லு!
உன் இமைகள் இமைக்கும் போது என்ன நிகழ்கிறது?
என் கண்கள் ஈரமாகிறது. வேறென்ன?
அது உனக்கு! ஆனால், நீ இமைக்கும் ஒவ்வொரு முறையும், நீயும் நானும் மட்டும் வசிக்கும் குட்டி உலகத்தில் இரவு பகல் மாறிக் கொண்டே இருக்கும். இமைகளை நீ மூடினால் இரவு. திறந்தால் பகல். நீ சிரிக்கும் போதோ அந்தக் குட்டி உலகத்தில் அழகான ஒரு குட்டி நிலவே உதிக்கும்...?
அப்படியெனில், என் அழகுக்காகத்தான் நீ என்னைக் காதலிக்கிறாயா. என் அழகெல்லாம் தீர்ந்தபிறகு உன் காதலும் தீர்ந்துவிடுமா?
நீ அப்படி வருகிறாயா? சரி, உன் அழகெல்லாம் எப்போது தீரும்?எனக்கு வயதாகிற போது! அடி முட்டாள் பெண்ணே, வயதானால் உன் அழகெல்லாம் தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறாய்? அழகு என்ன உன் வயதிலா இருக்கிறது?பின்னே?
?நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ அழகாக இருந்ததால்தான் நான் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன் என்பது உண்மைதான். ஆனால், உன்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, நீ பேரழகியாக மாறிவிட்டாய் என்பதுதான் பெரும் உண்மை. ஆகையால் கவலைப்படாதே! நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன் அழகு தீராது. இன்னும் சொல்வதென்றால், நீயும் நானும் இறக்கும்வரை உன் அழகு தீரவே தீராது. ஏன் என்றால், அதுவரை நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்... காதலோடு.
இதைக் கேட்டு, நீ என் தோளில் சாய்ந்தாய். நம் குட்டி உலகத்தில் ஒரு குட்டிக் குளிர்காலம் ஆரம்பமானது!


உனக்கு வாங்கி வந்தநகையைப்
பார்த்துஅய்... எனக்கா இந்த நகை
என்று கத்தினாய்.நகையோ,
அய்... எனக்கா இந்தச் சிலை
என்று கத்தியது.தினம் தினம்
ஒரு காக்கையைப் போல்
கரைந்து கொண்டிருக்கிறது
என் காதல்உன் வருகைக்காக.




அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராதே என்றேன்.
அர்த்தம் புரியாமல்
ஏன் என்றாய்.
உங்கள் வீட்டில்தான்
எப்போதும் பௌர்ணமியாக
நீ இருக்கிறாயே என்றேன்.ஆரம்பிச்சிட்டீங்களா என்று
நீ ஆரம்பித்தாய் வெட்கப்பட...


நன்றி-தபூ சங்கர்

நானாக நான் இல்லை...



நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா & அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில். குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்... இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!
ஏன்?
மாட்டேன்னா... மாட்டேன்!
அப்போ இனிமே நானும் உன்னை டீ போட்டுக் கூப்பிடக்கூடாதா?
இல்லேல்ல... நீ கூப்பிடலாம். கட்டிக்கப் போறவளை வேற எப்படிக் கூப்பிடறதாம்? & சொல்லிவிட்டு, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாய். உன் வெட்கத்தில், மாந்தோப்பில் காய்த்திருந்த மாங்காய்களெல்லாம் சிவந்து போயின.
இன்னொரு அமாவாசை நாளில் என் அக்கா, தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை. மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, அதோ பார் நிலா! என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில்தான்!
பிறிதொரு வருடத்தில் அதே மாந்தோப்பில்தான், என்னை மறந்துவிடுங்கள் என்று அழுதாய். அதோடு முடிந்துபோனது எல்லாம்!
இப்போது உன்னை இந்தா என்று அழைக்க, ஒரு கணவன் இருக்கிறான்.
அம்மா என்று அழைக்க, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால்... ஏண்டா கல்யாணமே வேணாங்கறே? என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மகனாக நான் இல்லை!





என்னைபைனாகுலர் பார்வைபார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.
அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே அணைப்பது
மாதிரிதான் இருக்கிறது.




உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்நான்
அப்படியே நிற்கிறேன்இன்னும்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.


நன்றி-தபூ சங்கர்

கன்னுக் குட்டி...



ஏழு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாயோ? என் அத்தை மகள் நீ. அப்பா இல்லாதவளாகையால் உன் அம்மாவோடு சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில்தான் இருக்கிறாய். மாமா மாமா என்று என்மீது உயிரையே வைத்திருப்பாய்.
பத்தொன்பது வயதில் வேலைக்காக நான் வெளிநாடு கிளம்புகையில்... அழுதபடியே சென்னை வரை வந்து என்னை வழியனுப்பியபோது, உனக்கு வயது பதின்மூன்று.
ஊரிலிருந்த காலங்களில்... நான் கடைத்தெருவுக்குப் போயிருந்தால்கூட, வாசலிலேயே காத்திருந்து என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொள்கிற கன்னுக்குட்டி நீ.
ரெண்டு கழுதை வயசாகுது... இன்னும் என்னடி மாமனக் கொஞ்சுற. யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க? என்று உன் அம்மா திட்டினால், எத்தனை கழுத வயசானாலும் என் மாமனக் கொஞ்சுவேன். யார் பாத்தா எனக்கென்ன? ஊரு பாத்துக்க ஒரு முத்தம்... உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்.... சாமி பாத்துக்க மூணு முத்தம்... என்று என்னை முத்தமிடுவாய். கடைவீதியிலிருந்து நான் உனக்கு வளையல் வாங்கி வந்திருந்தால் உனக்கு வளையல் வேணுமா..? மாமா வேணுமா? என்பேன். எனக்கு மாமாதான் வேணும் என்று என்னைக் கட்டிக் கொள்வாய்.
வெளிநாட்டில் இருக்கும்போது, வீட்டிலிருந்து வரும் கடிதங்களை நீதான் எழுதியிருப்பாய். Ԧamp;#2990;ாமா... உன் கன்னுக்குட்டி எழுதறேன் என்றுதான் ஆரம்பிப்பாய். ஆனால், ஒரு வருடம் கழித்து வந்த கடிதங்கள் நீ எழுதியவை என்றாலும், அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது என்று ஆரம்பித்திருந்தன.
அப்புறம் ஒரு நாள் டவுனுக்கு வந்த அப்பா, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய போதுதான் தெரிந்தது... நீ வயதுக்கு வந்துவிட்டாய் என்பது. அதன் பிறகு, இன்றுவரை உன் கடிதத்தில் ஒன்றில்கூட உன்னைப் பற்றி ஒரு வரிகூட இல்லை... உன் கையெழுத்தைத் தவிர. கடைசியாக எல்லாருக்கும் என்னென்ன வேண்டும் என்று எழுதியிருந்த கடிதத்தில்கூட உனக்கென்ன வேண்டும் என்று நீ எழுதவே இல்லை.
விமான நிலையத்தில் உன்னைத் தேடினேன். அப்பா மட்டும்தான் இருந்தார். வீட்டு வாசலில் உன்னை எதிர்பார்த்தேன். நீ இல்லை. வீட்டுக்குள் ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு என்னைப் பார்த்தாய். நான் பார்க்காத மாதிரி இருந்தேன். எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு, அவரவர்களுக்கு வாங்கி வந்ததை எல்லாம் கொடுத்து முடித்த போது, என் அம்மாதான் கேட்டார், என்னடா குட்டிக்கு ஒண்ணும் வாங்கிட்டு வரலையா? என்று. குட்டியா... யார் அது? என்றேன்.என்னடா இப்படிக் கேக்கற... உன் அத்தை மகடா? ஓ அவளா? மறந்துட்டேனே... லெட்டர்ல எழுதியிருக்கலாம்ல என்று நான் சொல்லி வாய் மூடுவதற்குள்... நீ ஓடிப்போய் கிணற்றில் குதித்து விட்டாய்.
தூக்கி வந்து, அறிவு கெட்ட முண்டம்... நான் மறந்திட்டேன்னு சொன்னா நீ நம்பிடுவியா? பெரிய மனுஷியானா அப்படியே எல்லாத்தை யும் மாத்திப்பீங்களோ? அரை மணிநேரம் நான் கடைத்தெருவுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாலே ஓடிவந்து கட்டிப் பிடிச்சிக்கிறவ நீ, இப்ப, இத்தனை வருஷம் கழிச்சி வர்றேன்... ஆனா, கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு யாரோ மாதிரி பாக்குற... என்னோட கன்னுக்குட்டியா இருந்தா இப்படி பண்ணுவியா நீ? என்றேன்.
இல்ல மாமா... இல்ல மாமா. தெரியாமப் பண்ணிட்டேன் மாமா! நான் உன் கன்னுக்குட்டிதான் மாமா! என்று அழுதபடி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு... ?ஊரு பாத்துக்க ஒரு முத்தம்... உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்... சாமி பாத்துக்க மூணு முத்தம்..!? என்று முத்தமிட்டபடி அழுதாய்.
திறக்காத ஒரு பெட்டியைக் காட்டி இதோ பார்... உனக்காக என்னவெல்லாம் வாங்கி வந்திருக்கேன் என்றேன்.
அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேணாம். எனக்கு நீதான் மாமா வேணும் என்று என்னை இறுக்கிக்கொண்டு அழுதாய்... முற்றிலும் என் கன்னுக்குட்டியாக மாறி!



என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!


இந்தக் காதல் கடிதம்கொண்டு
வருபவனைக்காதலிக்கவும்.
இவன் உனக்காகப்படைக்கப்
பட்டவன். இப்படிக்கு
இறைவன் உன் அழகு
வெட்டி வைத்திருந்த
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்.



உன் வீட்டுத் தோட்டத்தில்
வைத்த பச்சை ரகத் தென்னங் கன்று
வளர்ந்து மரமானதும்
செவ்விளநீர் காய்த்ததாமே
நீ குளித்த நீரில் வளர்ந்த மரம்
அப்படித்தானே காய்க்கும்!


நன்றி-தபூ சங்கர்

அம்மா அப்பா... நீ நான்!



உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன்.
அய்யோ பாவம்! என்றார் அப்பா.ஏம்ப்பா..?
டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... ?சரிதான் போடீ!?னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல ?காதலிக்கலாமா... வேண்டாமா??னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க! என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?? என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!
?போதும் பார்த்ததுகண் பட்டுவிடப் போகிறது என்றாய். ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால் என் கண்களாவது பட்டுப் போவதாவது? துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்கத்தி விட்டன கடல் அலைகள்...கோடான கோடி ஆண்டுகள் எம்பி எம்பிக் குதித்து கடைசியில் பறித்தே விட்டோமா நிலவை! என்று.
தொலைபேசியில்நீ எனக்குத்தானே
குட்நைட் சொன்னாய்.ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ நல்ல
இரவு என்று சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.
தான் வரைந்த ஓவியத்தைகடைசியாக
ஒரு முறை சரி செய்யும்
ஓவியனைப் போல் நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி செய்கிறாய்.
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று.
நன்றி-தபூசங்கர்

காத்திருத்தல்... தவம். காதல்... வரம்!



உன் தோளில் கிடக் கிற கர்வத்தில் வகுப்பறையின் வாசல்படியையே தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, உன்னை உள்ளே அழைத்து வந்தது உன் துப்பட்டா.
நீ செய்யும் அட்டூழியம் இப்படி என்றால், உன்னைக் காதலிக்க ஆரம் பித்த பிறகு நான் செய்யும் அட்டூழியங்களைச் சொல்லி மாளாது.
நீ வந்ததும் வராததுமாக என் நண்பர்கள் உன்னிடம் ஓடி வந்து அம்மா தாயே... ரெண்டு நாளா லீவுங்கறதால, ?உங்கிட்ட பேச முடியாத வாயால் யார்கிட்டயும் பேசமுடியாது?னு சொல்லிட்டு, மௌனவிரதம் இருக்கிறானாம். வாயவே தெறக்காம கையைக் காலை ஆட்டி சைகை செஞ்சே, ஹாஸ்டல்ல இருக்கிற எல்லாரையும் கொன்னுட்டான் உன் ஆளு. ஆனா, மூணுவேளையும் சாப்பிட மட்டும் வாயத் தெறந்தான். ?அதுக்கு மட்டும் ஏண்டா தெறக்கிற??னு கேட்டா... ?நான் சாப்பிடலைனா என் தேவதைக்குப் பசிக்குமே!?னு எழுதிக் காட்டுறான் என்று என் அட்டூழி யங்களை எடுத்துவிட்டார்கள்.
நீயோ சிரித்தபடி, சும்மாவே ஏடாகூடமா பேசுவ நீ. இதுல சைகை பாஷை வேறயா... பாவம் பசங்க! என்றாய்.
?ஏடாகூடமாவா..? இன்னிக்கு எங்கிட்ட மாட்டினே..?? என்று நினைத்தபடி ?நேத்து உங்கப்பா அம்மாவோட உன்னைக் கடைவீதியில பார்த்தேனே...? என்று என் மௌன விரதத்தைக் கலைத்தேன்.
?அடப்பாவி... இதைத்தான் நேத்து மதியம் பூரா சைகையில சொல்லி எங்களக் கொன்னியா? என்று என்னை அடிக்க வந்தார்கள் நண்பர்கள்.
அதற்கும் நீ சிரித்தபடி என் கல்யாணத்துக்கு நகை வாங்கப் போனோம் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாய்.
?என்னது... கல்யாணத்துக்கா?ՠஎன்று கத்தினேன் நான்.
கத்தாத... எல்லா அப்பா அம்மாவும் அப்பப்ப தன் பெண்ணோட கல்யாணத்துக்கு நகை வாங்கிச் சேப்பாங்கல்ல... அதான் இது என்றாய்.
அப்பாடா என்று நான் அமைதியடை யும்போது ?என் கல்யாணத்துக் காக எங்க அப்பா அம்மா என்னெல் லாம் சேத்து வைச்சிருக்காங்க தெரியுமா... என்றாய்.
?உங்க அப்பா & அம்மா சேத்து வெச்சதெல்லாம் எனக்கு வேணாம். நீ சேத்து வெச்சிருக்கிறதே போதும் எனக்கு? என்று என் ஏடாகூடத்தை ஆரம்பித்தேன்.
?நான் ஒண்ணும் சேத்துவைக்கலியே? என்றாய் அப்பாவியாக.
?ஒண்ணும் சேத்து வைக்கலியா... தோ, ஒரு பெரிய கண்ணாடி இருக்கே... போய் அதுக்கு முன்னாடி நின்னு பாரு... நீ என்னென்ன சேத்து வெச்சிருக்கேனு தெரியும்? என்றேன்.
ச்சீ என்று அழகு காட்டி விட்டு எங்கடா கத்துகிட்ட இப்படி எல்லாம் பேச என்றாய். காதலிடம்! என்றேன் நான்.


உன் பாட்டியின் நினைவுநாளில்
நீ ஒரு சின்ன
இலையில்சாதத்தை வைத்துக் கொண்டு
கா கா என்று கத்துவதைப்பார்த்ததும்அட...
குயில் காகான்னு கூவுதே
என்றேன்.நீ இலையைக்
கிணற்றுமேல்போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

உன்னைப் பார்த்தால்
எடை பார்க்கும் இயந்திரம் கூடகவிதை
எழுத ஆரம்பித்துவிடும் போல.
உன் எடையை அடிக்க வேண்டிய இடத்தில்
அழகு நீங்கலாக 50 கிலோ என்று
அடித்திருப்பதைப் பார்!

நன்றி-தபூ சங்கர்

இனிமேல் எனக்குப் பரிசு தராதே!



உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!? என்றாய்.
காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!
நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன் என்றேன். ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது? என்றாய். இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது! என்றேன். நீ சிரித்துவிட்டு, அப்ப நான்
மட்டும் வானத்தைப் பார்க்கணுமா? என்றாய்.
வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள் என்றேன்.
ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாய். சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது! என்றேன். சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது? என்றாய்.
சடங்கே ஒரு விளையாட்டுத்தானே! என்றேன். என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.
கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.
உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.
எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!? என்றேன்.
அது மட்டும் என்ன அப்படி உசத்தி?? என்றாய்.
ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!?


உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
கடிகாரம் ஓடலியா??
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்
அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!

நன்றி-தபூசங்கர்

ஆ... அந்த மந்திரச்சொல்!



பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கேள்வி ஒன்றுக்குத் தவறாக பதில் சொன்ன என்னை, சரியாகப் பதில் சொன்ன உன்னைவிட்டுக் கொட்டச் சொன்னார் வாத்தியார்.
கொட்டுக்கள் புதிதல்ல... இதற்கு முன் கொட்டிய எல்லோருமே, எப்போதோ அவர்களுக்கு நான் செய்த இம்சைகளுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வதுபோல, கோபத்தை என் தலையில் காட்டுவார்கள்.
ஆனால் நீயோ உன் கொட்டின் மூலம், உன் பிரியத்தைக் காட்டி விட்டாய். என்னை வலிக்காமல் கொட்டிய முதல் கை உன்னுடையது தான். ஒருவேளை இது பெண்ணின் கை என்பதனால் வலிக்கவில்லையோ என்று நினைத்துவிட முடியாது. என்னைக் கொட்டிய கைகளில் பலது பெண் கைகள்தான்.
கொட்டிய கைகளுக்குச் சொந்தக் காரிகள், வகுப்பு முடிந்ததும் நல்லா வலிச்சிச்சா? என்று கொக்காணிச் சிரிப்பு காட்டிப் போவார்கள். ஆனால் நீயோ வகுப்பு முடிந்ததும் ரொம்ப வலிக்குதா? என்று இதமாகக் கேட்டாய். நீதான் கொட்டவே இல்லையே! என்று நான் சொன்ன பதிலைக் கேட்டு, வெட்கமாய் ஓடிப்போனாய்.
எப்படி என்றே தெரியவில்லை... அதற்குப் பிறகு நான் யாரிடமும் கொட்டு வாங்கியதில்லை. படிக்கிற பையனாக மாறிவிட்டேன்.
இதை உன்னிடம் சொன்னபோது, ?நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். என்னா..? என்று உரிமையோடு சொல்லிவிட்டு மறைந்து போனாய்.
அந்த உன் மந்திரச்சொல்லால்... நான் படிப்பில் பெரிய ஆளாகி ஊருக்குத் திரும்புகையில்... ஒரு சின்னஞ்சிறு குடிசை முன் கையில் குழந்தையோடு நின்றிருந்த நீ என்னைப் பெருமையோடு பார்த்தாய்.
?கடவுளே... உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?? என்று மனம் அதிர நான் தடுமாறி நிற்கையில், நீயோ என்னைப் பார்த்து நல்லாயிருக்கியா... சீக்கிரம் வீட்டுக்குப்போ. ?என் புள்ள இன்னிக்கு வருது... என் புள்ள வருது?ன்னு காலை யில இருந்து உன் ஆத்தா ரோட்டுக்கும் வீட்டுக்கும் நடந்திட்டிருக்கு என்றாய் ஒரு தெய்வத்தின் குரலில்.
நான் சிறுவனாகிப் போனேன்!

முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,முதல்முதலில்
உன்னைஇரவு உடையில்
பார்த்த அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!
வெள்ளிமுளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?இல்லை...
நீ குளிக்கும்போதுவெள்ளிமுளைக்கிறதா?
நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
அந்த ரெண்டு மீன்களுக்கு
மட்டும் ஏன் அவ்வளவு
அழகான தொட்டி? என்று.


நன்றி-தபூ சங்கர்

மனச வளத்தேன்... என் மனச வளத்தேன்...??



குழந்தையின் கையிலிருந்த மிட்டாயைப் பிடுங்கி ஒளித்துக்கொண்டு ?காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்று விளையாட்டு காட்டினாய் நீ. குழந்தையோ இல்லே..! என்றபடி உன்னையே சுற்றிச் சுற்றி வந்தது.
நானும் ஒரு குழந்தைதான். கையில் மனதை வைத்துக்கொண்டு, நீ எப்போது பறிப்பாய் என்று உன்னையே சுற்றிச் சுற்றி வரும் குழந்தை.
நீ என் மனதைப் பறித்துக் கொண்டு காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. நானும் இல்லே..! என்று உன்னைச் சுற்றி வர மாட்டேன். பதிலாக, நீ பறித்த அடுத்த நொடியே ?பறிச்சுட்டா... பறிச்சுட்டா! என்று கத்தியபடியே உலகமெல்லாம் ஓடுவேன்.
நீ என் மனதை, அருகே வந்து தொட்டுப் பறிக்க வேண்டும் என்பதில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து ஒரு புன்னகை வலை வீசினாலோ... ஒரு பார்வைத் தூண்டில் வீசினாலோகூடப் போதும். காக்காய் உட்கார்ந்ததும் விழும் பனம்பழமாய் என் மனது உன் மடியில் விழுந்துவிடும்.
அதை எங்கே ஒளித்து வைத்துக் கொள்வது என்கிற கவலையோ, சிரமமோ உனக்கு வேண்டாம். நீ பறித்தவுடன் அதுவே ஓடிப்போய் உன் இதயத்துக்குள் ஒளிந்துகொள்ளும்.
கடைசியில் அந்தக் குழந்தையிடம் நீ மிட்டாயைத் திருப்பிக் கொடுத்த மாதிரி, என் மனதினை எனக்குத் திருப்பித் தர வேண்டியதில்லை. அது உனக்கே சொந்தமானது.
ஒருவனின் கையில் ஒப்படைப் பதற்காகவே ஒரு மகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோரைப்போல, நான் உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே என் மனதை வளர்த்திருக்கிறேன்.
மகளைக் கொடுத்தவர்கள்கூட அவ்வப்போது அவள் புகுந்த வீட்டுக்கு வந்து எப்படிம்மா இருக்கே? என்று கேட்டுவிட்டுப் போவார்கள். ஆனால்... நான் உன்னைப் பார்க்க, தினம் தினம் வந்தாலும் என் மனதைப் பற்றி ஒரு நாள்கூட... ஒரு வார்த்தைகூட உன்னிடம் கேட்க மாட்டேன்.
என் பேச்சையெல்லாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த நீ, உன் மனதைப் பற்றி ஒன்றும் கேட்க மாட்டாய். ஆனால், அதற்குப் பதிலாக என்னையே கேட்பாயே! என்றாய் தோரணையாக.
?ச்சே... ச்சே.. நான் கேட்க மாட்டேன். ஆனால், நீ பறிக்கிற என் மனதே எனக்கு உன்னைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விடும்? என்றேன்.
ஆசை... ஆசை!? என்று சிரித்தாய். அவ்வளவுதான்... அந்தச் சிரிப்பில் விழுந்தது என் மனது, உன் மடியில்!


இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.ஆனால்
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்உயிர் பெறுகிறதே.




இந்த வேப்ப மரத்தின்
பழங்கள் இனிக்கிறதே என்றாய்
ஒன்றும் தெரியாதவளைப் போல்.
இனிக்காதே பின்னே...
இப்படி நீமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினால்.


வேடந்தாங்கலுக்குப் போகலாமா என்றாய்.
ஆயிரம் மைல்களுக்குஅப்பாலிருந்தெல்லாம்பறவைகள்
வந்து அங்கேகுவியும் போது
அருகிலிருக்கும் நீ போகவில்லைஎன்றால்
அது சரணாலயமா என்ன?!
நன்றி-தபூ சங்கர்

சிறு தெய்வங்களும் ஒரு பெருந் தெய்வமும்!



கோயில் திருவிழாவன்று, கூத்தும் ஆரம்பித்துவிடும். ஊரில் இருக்கிற எல்லா கன்னிப் பெண்களும் வரிசையாக ஒரே நேரத்தில் பற்ற வைக்கிற பொங்கல் பானைகளில் எந்தப் பானை முதலில் பொங்குகிறதோ, அந்தப் பானைப் பொங்கல்தான் சாமிக்குப் படைக்கப்படும்.
இதற்குப் பின்னால் இன்னொரு நம்பிக்கையும் உண்டு. எந்தப் பெண்ணாவது எவன் மீதாவதுஆசை வைத்திருந்தால்... அவள் வைத்திருக்கும் பானை பொங்கினால்தான் அவள் ஆசை நிறைவேறும். இல்லை என்றால் அரோகராதான் என்பதே அது. இந்தக் கொடுமைக்குப் பயந்துதான் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் காதல் என்றாலே கத்திரிக்கா என்று கழன்று ஓடிவிடுவார்கள்.
ஆனால்... அதையெல்லாம் மீறி என் மீது உயிரை வைத்துவிட்ட நீ, இன்று பொங்கல் வைத்திருக்கிறாய். ?எங்க பானைதான் முதலில் பொங்கணும் சாமி என்று எல்லாப் பெண்களும் வேண்டிக்கொண்டு இருந்தார்கள். சாமியையும் அவ்வப்போது என்னையும் நீ பார்க்கும் கலங்கடிக்கும் பார்வை என்னை ரொம்ப ரொம்பக் கலவரப்படுத்தவே, நான் சாமியிடம் ஓடினேன், சாமி ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.
?ஏய் சாமி... நீ என்ன முணுமுணுத்துட்டிருக்கே? என்றேன் ஆச்சரியமாக. ச்சு... சத்தம் போடாதே... உன் ஆளு வெச்சிருக்கும் பொங்கல் பானைதான் முதலில் பொங்கணும்னு நான் எங்கப்பனை வேண்டிட்டு இருக்கேன்... இல்லனா காதல் என்னைக் கோச்சிக்கும்! என்றது சாமி.
என்னது... காதல் உன்னைக் கோச்சுக்குமா? நீ ஏன் காதலுக்குப் பயப்படுறே? காதல் என்ன அவ்ளோ பெரிய கடவுளா? என்றேன்.
கத்தாதே... நாங்களெல்லாம் சிறு தெய்வங்கள். காதல்தான் பெருந்தெய்வம் என்ற சாமி, பொங்கிடுச்சு... பொங்கிடுச்சு என்று கத்த, நான் திரும்பிப் பார்த்தேன். அது உன் பொங்கல் பானை!
நீயும் நானும் ஒரு திகில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், படத்தில் திகில் காட்சிகள் ரொம்ப அதிகம் என்றாய்.
ஆமாம். மொத்தம் இருபத்தேழு என்றேன்.
திகில் காட்சிகளை எல்லாம் எண்ணினாயா? என்றாய் ஆச்சரியத்தோடு.
இல்லையில்லை... ஒவ்வொரு திகில் காட்சிக் கும் நீ பயந்துபோய் என் தோளில் முகம் புதைத்துக் கொண்டாய் அல்லவா... அதை எண்ணினேன் என்றேன்.
ச்சீ என்று வெட்கப் பட்டு முகத்தை உன் கைகளில் புதைத்துக் கொண்டாய்.
என்ன அநியாயம் இது. பயத்துக்கு மட்டும் என் தோள்கள் வேண்டும் உனக்கு. ஆனால், வெட்கம் வந்தால் மட்டும் வேண்டா மாக்கும் என்றேன்.
பயம் வரும்போது உன் தோளில் முகம் புதைத்துக் கொண்டால், உடனே என் பயம் போய்விடும். ஆனால், வெட்கம் வரும்போது, அப்படிச் செய்தால், என் வெட்கம் இன்னும் அதிகமாகிவிடுமே என்று சிரித்தபடி ஓடிப் போனாய்!
அழகு நிலையத்துக்குள்
நுழைந்தாய் நீ,அங்கிருக்கும்
அழகு சாதனங்கள்அலறின?
அய்... அழகு வருது? என்று!
புதிய புடவையில் வந்து?
புடவை நல்லாருக்கா?
என்று கேட்டாய் என்னிடம்,?நல்லா இல்லேனு சொல்லு?
என்று கெஞ்சியதுசற்றுமுன்
நீ களைந்துகொடியில் போட்டிருந்த புடவை.

நன்றி-தபூ சங்கர்

மொத்தம் எத்தனை முத்தம்?



நாளைக்கு உன் பர்த்டேயாச்சே! என்ன ஸ்வீட் வேணும் சொல்லு... நான் செய்து எடுத்துட்டு வர்றேன் என்றாய் ஆசையாய்.
முத்தம்! என்றேன் நான்.
ஹேய் என்று கைதட்டிச் சிரித்துக் கலாட்டா செய்த உன் தோழிகள் போடீ, போய் உன் உதடு நெறைய செஞ்சு எடுத்துட்டு வா! என்று கத்தினார்கள். தலையில் அடித்துக்கொண்டு ஓடிப்போனாய்.
அடுத்த நாள் நீ வகுப்புக்குள் நுழையும்போது, உன் தோழிகள் எல்லாம் உன் உதட்டையே உற்றுப் பார்த்தபடி கேட்டார்கள்... ?எவ்ளோ செஞ்சு எடுத்திட்டு வந்திருக்கீங்க மேடம்... ஒரு கிலோவா.. ரெண்டு கிலோவா?
நீ டிபன் பாக்ஸ் திறந்து நீட்டினாய். அதில் ஒரு கேக் இருந்தது... உதடு வடிவில்!
மழையில் நனைந்து வந்த என்னைப் பார்த்ததும் பதறிப்போன நீ, இப்படி மழையில் நனைஞ்சா காய்ச்சல் வந்துடும்! என்று திட்டியபடியே, உன் தாவணியால் என் தலை துவட்டிவிட்டாய். அடுத்த நாள் எனக்குக் காய்ச்சல்.
நல்லாத்தானே துவட்டிவிட்டேன். அப்புறம் எப்படிக் காய்ச்சல் வந்தது? என்று கவலைப்பட்டாய்.
இது மழையில் நனைந்ததால் வந்த காய்ச்சல் இல்லை. உன் தாவணியில் துவட்டிவிட்டதால் வந்த காய்ச்சல் என்றேன்.
ச்சீ என்று என்னைக் கிள்ளிவிட்டு ஓடியதும் காய்ச்சல் நின்றுவிட்டது. ஆமாம், அதென்ன கிள்ளலா, இல்லை என் காய்ச்சல் தீர நீ போட்டுவிட்ட அழகான ஊசியா?
அன்று முதல் தாவணி அணிவதே இல்லை நீ. நஷ்டம் எனக்கும் உன் தாவணிக்கும்!
ஒரு வருடம் என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை அலையவிட்டு, கடைசியில் போனால் போகிறது என்று ஏற்றுக்கொண்ட உன்னை என் காதல் கொண்டே பழிவாங்க வேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது... வகுப்பறைக்குள் பேராசிரியர் நுழைந்து மதிப்பெண்களை அறிவிக்க ஆரம்பித்தார்.
எல்லாருக்கும் பத்துக்குப் பத்து. ஆனால், உனக்கு மட்டும் ஏழுதான் என்றார் என்னைப் பார்த்து. அவருக்கு என்னைப் பிடிக்காது என்பதனால் எப்போதும் குறைத்துதான் போடுவார். அதனால் ரொம்ப தேங்ஸ் சார். ஏழு எனக்குப் பிடிச்ச நம்பர் சார்! என்றேன். உனக்கு ஏழரைதானே பிடிக்கும் என்றார் அவர். அது நீங்க பாடம் நடத்தும்போது பிடிக்கிறது சார் என்றேன். சிரித்துவிட்ட ஆசிரியர், அதுசரி.. உனக்கு ஏன் ஏழு பிடிக்கும்? என்றார். ஏன்னா.. நான் இவகூட வாழப்போற ஜென்மம் ஏழு சார் என்றேன் உன்னைக் காட்டி.
மானத்தை வாங்கறானே என்று நீ டெஸ்க்கில் ஒளிந்துகொண்டாய். நீ இந்த டிகிரியை முடிக்க எடுத்துக்கொள்ளப்போற வருஷமும் ஏழு என்று தலையில் அடித்துக்கொண்டு போனார் ஆசிரியர். பிடுங்கித் தின்னும் வெட்கத்துடன் என்னை முறைத்தாய் நீ பேரழகாய்!

சின்ன வயதிலிருந்து
என்னை தொட்டுப் பேசும்
பழக்கத்தைநீ நிறுத்திக்கொண்ட
போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!

நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!


ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற
பெண்ணைப் பார்க்கதினமும்
ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே
என்றுகேட்ட
என் நண்பனிடம் சொன்னேன்...
நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம்
வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!

நன்றி-தபூ சங்கர்

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்


இருட்டப் போகுது... நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய்.
இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன். எதுக்கு? என்றாய் வேகமாக.
உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி! என்றேன்.
வெளிச்சமும் கிடையாது... கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய்.
அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில் அமர்ந்து, எப்படித்தான் உன் வெளிச்சத்தை உறுதி செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். என் பின்னால் வந்து, என் கண்களைப் பொத்திக்கொண்டு யாருனு சொல்லுங்க? என்றாய் குரலை மாற்றி.
துள்ளிக் குதித்தெழுந்து கத்தினேன்... என் தேவதைக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறது. நான் கண்டுபிடிச்சிட்டேன்!?
என்ன உளர்றே? என்றாய்.
இல்லையில்லை. நீ என் கண்ணைப் பொத்தினால் எனக்கு இருட்டாத்தான் ஆகியிருக்கணும். ஆனால், எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே... அதுதான் உன் வெளிச்சம்! என்றேன்.
பொய் சொல்லாத என்று வெட்கப்பட்டாய் நீ இன்னும் பிரகாசமாய்!
நமக்குக் கல்யாணமான பிறகு, வாரம் ஒரு நாள் நீ என்னை வெளியே கூட்டிப் போகணும். ஊரைச் சுற்றிக் காட்டணும் என்றாய்.
தாராளமா! ஆனால், அதற்குப் பதிலாக வாரத்தின் மீதி ஆறு நாட்களும், வீட்டுக்குள்ளேயே நீ எனக்கு, உன்னைச் சுற்றிக்காட்டணும் என்றேன்.
ம்ம்ம்... சுற்றிக்காட்ட நான் என்ன ஊரா? என்றாய்.
ஊர் இல்லை... நீ என் உலகம்!
முதலிரவு அறையில் உன் வருகைக்காகக் காத்திருக்கையில்... நேற்று வரை என் எல்லா இரவுகளையும் காவல் காத்த உன் கனவுகள் கவலையோடு வந்து நின்றன... இனிமேல் எங்களை நீ காண்பாயா... அல்லது நாங்கள் எங்காவது போய்விட வேண்டியது தானா என்றன வேதனையாக.
ச்சே... ச்சே! ஏன் இப்படியெல்லாம் பேசு கிறீர்கள். நீங்கள் எங்கும் போக வேண்டாம். என்னுடனேயே இருந்து நீங்கள் எல்லாம் நனவாவதை வேடிக்கை பாருங்கள். அதற்குத் தானே இவளை நான் திருமணமே செய்தேன் என்றேன் பால் சொம்புடன் வந்த உன்னைக் காட்டி.
இனி, வாரம் ஒரு நாள் முத்த விரதம் இருக்கப் போகி றேன். அன்று உனக்கு முத்தம் எதுவும் தர மாட்டேன் என்றாய் நீ.
ஏன்... உன் முத்தங்கள் தீர்ந்துபோய் விடுமா? என்றேன் திகைப்புடன்.
யார் சொன்னது? முத்தத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு... மறுநாள் மீண்டும் தொடங்கும் போது... அப்போதுதான் புதிதாய் உனக்கு முத்தம் கொடுப்பது மாதிரி ஒரு பரவசம் ஏற்படுமே, அதற்குத்தான்!? என்றாய் முகத்தை மூடிக் கொண்டு.
ஏதேது... என்னை மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே?? என்றேன்.
?ம்ஹ?ம்... நீதான் வார விடுமுறையெல்லாம் விரும்பாத வேலைக்காரனாச்சே!? என்று என்னை இழுத்தாய் நீ!
நீ சமைக்கும்போது, நான் உதவ வந்தால் நீ ஏன் எப்போதும் வேண்டாம் என்றே தடுக்கிறாய்? என்றேன்.
விதவிதமான முறையில் நீ எனக்குக் காதலை வழங்குவது மாதிரி, நான் உனக்குக் காதலை வழங்கும் வழிகளில் ஒன்று இந்தச் சமையல். இதில் நீ எனக்கு உதவிவிட்டால், என் காதல் குறை யுள்ள காதல் ஆகி விடுமே.
அதனால், சமர்த்துப் பிள்ளையாய் தள்ளி அமர்ந்து, உன் ஆசை மனைவி உனக்காகக் காதல் சமைப்பதை வேடிக்கை பார்! என்று என்னிடம் சொல்லிவிட்டு, காரியத்தில் கண்ணானாய். இல்லை... இல்லை... காதலில் கண்ணானாய்!


நன்றி-தபூ சங்கர்

தேவதைகளின் தேவதை!


முதலிரவு...
திருவிழாவுக்குப் பிறகு தேவதை நீ தூங்கிக்கொண்டு இருந்தாய். நான் உறங்க மறந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பெண். அதுவும் என் பிரியத்துக்குரிய பெண் தூங்குவதை, அதுவும் என் படுக்கையில் தூங்குவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மணப்பெண்ணாக உன்னைப் பார்த்த போதோ, உனக்கு மாலை இடும்போதோ, தாலி கட்டும்போதோ, முதல் முறையாக உன் விரல் பிடித்து தீயை வலம் வரும் போதோ அல்லது குடத்தில் மோதிரம் எடுக்கும் சடங்கில் உனக்கு மோதிரத்தை விட்டுக் கொடுத்தபோதோ, அதற்காக ஓரக்கண் ணால் நீ என்னைப் பார்த்த அழகிய பார்வையின்போதோதான்... நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்றாலும், இப்போது உன் துயிலைப் பார்க்கிறபோது... ஏதோ நூறாண்டுகளாக உன்னை நான் காதலிப்பதைப் போல நெஞ்சு முழுவதும் பொங்கி வழிந்தது காதல்.
நீயோ அழகுகளை எல்லாம் காவலுக்கு வைத்துக்கொண்டு ஒரு மகாராணியைப் போல் தூங்கிக்கொண்டு இருந்தாய். நானோ உன் உறக்கத்துக்குள் நுழைய முடியாத கனவு போல் வெளியே அமர்ந்திருந்தேன், வெகுநேரம்!
எங்கோ ஒரு சேவல் கூவியது. நீ விடியற்காலையில் எழுகிற பழக்கம் உடையவளாக இருந்தால், விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாயோ என்கிற எண்ணத்தில் படுக்கப் போகையில், உன் ஒரு கையைத் தூக்கி என் மடியில் போட்டாய். உனது கையை விலக்கிவிட்டுப் படுத்துக்கொள்ள மனமின்றி அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். என் மடியோ, உன் கை தூங்கும் குட்டித் தலையணையாக மாறிப்போய் இருந்தது.
சற்றே நீ புரண்டு படுக்கையில்... கால்புறத்தில் கொஞ்சம் விலகிய உன் ஆடையைச் சரி செய்தேன். அவ்வளவுதான்... இதுவரை விம்மிக் கொண்டிருந்த ஆனந்தம் வெடித்து, கண்ணீராய்ப் பூத்தது என் கண்களில்.
போதும்... இத்தனை வருடமாகப் பெரும்பாடுபட்டுக் கடைப்பிடித்த என் பிரம்மச்சரியத்துக்குப் பரிசாக தேவதைகளின் தேவதையை அனுப்பி வைத்த என் தெய்வமே... போதும் உன் கருணை!

உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றிகட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.


உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.

நன்றி-தபூ சங்கர்

மன்னிப்பும் அன்பளிப்பும்!



நீயும் நானும் காதலும் யாரும் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருந்த காலத்தில்... நீ புதிய உடை அணிந்து வருவாய். ?புது டிரெஸ் நல்லா இருக்கா?? என்று கேட்கத் துடிக்கும் உன் உதடுகள். ஆனால், அதை உன் விழிகள் கேட்கும். உன் கொலுசுகளை அனுப்பிக் கேட்பாய். உன் வளையல்களைக் குலுக்கி விசாரிப்பாய். ஏன் உன் புதிய உடையையே சரசரக்கவிட்டுக் கேட்டுப் பார்ப்பாய்.
ஆனால், நானோ மாலை வரை மவுனமாகவே இருந்துவிட்டு, சாவகாசமாக புது டிரெஸ் நல்லாருக்கு என்பேன். அப்போது நீயோ, நான் கேட்டேனா? என்பாய் அநியாயமாய்.
?பின்ன என்ன... உடனே சொல்ல வேண்டியதுதான நீ என்றாய் பிறகொரு நாளில்.
?ஏன்... நீ கேட்க வேண்டியதுதானே, உன் வாய் திறந்து! என்றேன்.
ஆமா, நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையானே தெரியாம உன் முன்னாடி வந்து நின்னு அசடு மாதிரி, ?புது டிரெஸ் நல்லாருக்கா??னு கேப்பாங்களாக்கும் என்றாய்.
அப்ப... நல்லாயிருக்குனு சொன்ன நான் இளிச்சவாயனா? என்றேன் கோபமாக.
கோச்சுக்காதடா... வேணும்னா நான் ஸாரி கேட்டுக்கறேன் என்றாய்.
கேளு! என்றேன்.
மன்னிச்சுக்கடா... மச்சான் என்றாய் ஸ்டைலாக.
அடிப்பாவி! புது டிரெஸ் நல்லாருக்கானு நீ வாயாலயா கேட்டே? கண்ணைக் காட்டி, கையைக் காட்டித் தானே கேட்டே. அந்த மாதிரி இப்போ மன்னிப்பும் உன் கன்னத்தால கேளு என்றேன்.
கன்னம் எப்படிக் கேட்கும்?
நீ கன்னத்தைக் காட்டு. கன்னமே கேட்டுக்கும் என்றேன்.
சிணுங்கியபடி கன்னம் காட்டினாய். நான் உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
வெட்கப்பட்ட நீ, இதுதான் மன்னிப்பா? அன்பளிப்பு மாதிரி இருக்கு! என்றாய்.
காதலில் அப்படித்தான்... மன்னிப்பு கூட அன்பளிப்பாகும்!
எந்த நாளை நீ பிரமாத மாகக் கொண்டாட நினைக் கிறாய்? என்றேன், நமக்குக் கல்யாணமான சில மாதங்கள் கழித்து.
இதிலென்ன சந்தேகம். நம் கல்யாண நாளைத்தான்! என்றாய் முகம் நிறைய மகிழ்ச்சியுடன். ஆனால், நாம் காதலிக்க ஆரம்பித்த நாளைத்தான் நான் பிரமாதமாகக் கொண்டாட நினைக்கிறேன் என்றேன்.
ஏன்... கல்யாண நாள் உனக்கு முக்கியமாகப் பட வில்லையா? கல்யாணம் அதற்குள் கசந்து விட்டதா உனக்கு? என்றாய் கோபத்துடன்.
ஐயோ! கல்யாணம் கசந்து போயிருந்தால், காதலித்த நாள் வெறுத்துப் போய் இருக்குமே. நான் காதலித்த நாளைப் பெரிதாகக் கொண்டாட விரும்புவதே, நம் கல்யாண வாழ்க்கை இனிப்பாக இருப்பதால்தானே! என்றேன்.
?எப்படிப்பா இப்படில்லாம் யோசிக்கறே?? என்றாய் என் தலையில் ஒரு செல்லக் குட்டுவைத்து.
ஒரு அழகான அலமாரி வேண்டும் என்றாய். வாங்கி வந்தபோது, அதை படுக்கை அறையில் வை என்றாய்.
எதுக்கு இந்த அலமாரி? என்றேன்.
ம்... ஒரு முக்கியமான நினைவுச் சின்னத்தை நீயும் நானும் மட்டும் பார்ப்பது மாதிரி இதில் வைக்கப்போகிறேன் என்றாய்.
அது என்ன அது? என்ற எனக்குப் பதிலே சொல்லாமல், Ԧamp;#2953;ன்னிடம் எனக்குப் பிடித்தது எது தெரியுமா? என்று கேள்வி கேட்ட நீயே, பதிலும் சொன்னாய்.
?என் அன்புக் கணவா! என் மார்பு உன் மீது படும்போதெல்லாம் நீ ஒரு பாட்டுப் பாடுவாயே... அது பிடிக்கும். அதே மார்பு தப்பித்தவறி வேறு எந்தப் பொருளின் மீது பட்டுவிட்டாலும், உடனே கோபம் வந்து அந்தப் பொருளைத் தூக்கிப்போட்டு உடைப்பாயே... அது ரொம்பப் பிடிக்கும். அப்படி நீ உடைத்த ஒரு பொருளை எடுத்து ஒட்டி வைத்திருக்கிறேன். அதை வைக்கத் தான் இந்த அழகான அலமாரி என்றாய்.
ஒரே ஒரு பொருளை வைப்பதற்கா இத்தனை பெரிய அலமாரி? நீ உடைப்பதற்காக இன்னும் பல பொருட்கள் இந்த வீட்டில் காத்திருக்கின்றனவே. என்று சிரித்தாய். பார்த்து... அந்த அலமாரி மேல சாஞ்சுடாத... அப்புறம் அதையும் உடைச்சுப் போட்டுடுவேன் ஏன் உன் மீதும்தான் சாய்கிறேன். அப்போ உன்னையும் உடைத்துவிடுவாயா?
அதுதான் நீ சாயும் ஒவ்வொரு முறையும் நான் உடைந்து உருகிவிடுகிறேனே!


கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின்
உச்சியில் இருக்கிறாய் என்று சொல்...
ஒரு மலையேறும்
வீரனைப் போல் உன்னைத்
தேடி வருகிறேன் நான்.
அய்யோ...
நீ கொடுத்தபறக்கும்
முத்தத்தைக்காற்று
தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதே!

உங்கள் எதிர் வீட்டு வாசலின்
திருஷ்டிப் பூசணிக்காய்க்கு
உன் மேல் ஒரு கண்போல.
உன்னைப் பார்க்கும்போது
அது தன் மீது வரைந்திருக்கும்
கர்ண கடூரமான
முகத்தைகமல்ஹாசன்
முகம்போலமாற்றிக்கொள்கிறதே.


நன்றி-தபூ சங்கர்

திமிரழகி!


மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத் தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக் கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.
அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன். ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய். அவ உன் மேல் கோபமா இருக்கா! என்றாள் எனக் கும் உனக்குமான தோழி.
ஏன்? என்றேன் வியப்பு காட்டாமல்.
நேத்தைய கோபம்! என்றாள்.
அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக் குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.
அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.
நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன். அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. ஆனாலும் மாலைகளில் கடற்கரைக் குப் போய், எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.
மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.
எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.
உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
சரி, அதை விடு என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.
அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.
இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! என்றேன்.
அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? & ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ, அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா! அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு, நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
அப்படி வா வழிக்கு! என்றேன்.
மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு? என்றாய் குறுகுறு பார்வையுடன்.
ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய், ஒரு பூக்கடை முன் நிறுத்தி... �எல்லாப் பூவையும் குடுங்க!

� என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, �நான் உன்னைக் காதலிக் கிறேன்!

� என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்... இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ!
உன்னை விடதீயணைப்புத் துறைஎவ்வளவோ மேல். வீடு எரிந்தால் அது அணைக்க வரும். ஆனால், நீயோ என்னை வந்து அணைத்துவிட்டு எரியவிடுகிறாய்!



நிலவைச் சுற்றி வர

விஞ்ஞானிகள்

செயற்கைக் கோள்

அனுப்புவது மாதிரி

உன்னைச் சுற்றி வர

என்னை அனுப்பியிருக்கிறது

காதல்!


நன்றி-தபூ சங்கர்

சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!



சிவபெருமானைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது! என்றேன் எரிச்சலுடன்.
பார்றா... கடைசியில் அவர் தலையிலும் கை வெச்சுட்டியா...ஆமா, அவர்
மேல அப்படி என்ன உனக்குப் பொறாமை? என்றாய்.
தன் உடலில் பாதியை அவர் தன் மனைவிக்குக் கொடுத்த மாதிரி, என் உடலில் சரிபாதியை உனக்குக் கொடுக்க ஆசை. ஆனால், என்னால் முடியவில்லையே. அதான்!
அதனாலென்ன... நீதான் உன் இதயத்தையே எனக்குக் கொடுத்துவிட்டாயே!
என்ன பெரிய இதயம்... அது என் கையளவு கூட இருக்காதே...
யார் சொன்னது, அது உன்னை விடப் பெரியது தெரியுமா?சும்மா சொல்லாதே!
நிஜமாப்பா! உன்னைவிட, இந்த உலகைவிடப் பெரியது உன் இதயம்!
அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தா லும், Ԧamp;#2984;ிஜமாவா?ՠஎன்றேன் நான்.
ஏன் நம்ப மாட்டேன் என்கிறாய். உன் இதயத்தை நீ எனக்குக் கொடுப்பதற்கு முன்பு, நீ அதற்குள் சென்று பார்க்கவில்லையா?
எங்கே பார்ப்பது? ஒரு ராஜகுமாரிக் காக நிர்மாணிக்கப்படும் அந்தப்புரத் துக்குள் செல்வதற்கு, அதன் காவலாளியான உனக்கு உரிமை இல்லை என்று என்னை என் இதயம் விரட்டியடித்து விட்டதே!
சரி வா... நான் உனக்கு உன் இதயத்தைச் சுற்றிக்காட்டுகிறேன் என்றாய்.
வேண்டாம்... வேண்டாம். நான் வெளியிலேயே காவல் காக்கிறேன். நீ உள்ளே போய் ஓய்வெடு. ஆமாம், நீ தூங்கும் போது, என் இதயம் துடிக்கிற சத்தம் உனக்குத் தொல்லையாக இருக்கிறதா?
ச்சே... சத்தமா அது... சங்கீதம்! என்னைத் தாலாட்டும் இசை! என்றாய்.
சரி... அது போகட்டும், என் இதயம் சுருங்கிச்சுருங்கி விரியும்போது... உன் மீது இடிக்கிறதா? என்றேன்.உன்னை மாதிரி நினைத்துவிட்டாயா உன் இதயத்தையும். அது ரொம்ப நல்ல பிள்ளை!
அப்படின்னா, நான் உன்னை அடிக்கடி இடிப்பதாக நீ தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? என் உடலில் பாதியை, நான் உனக்குத் தரத் துடிக்கிற முயற்சி தெரியுமா அது?
ஆஹா... என்ன விளக்கம்டா. இதை மட்டும் அந்த சிவபெருமான் கேட்டால், அப்படியே ஓடி வந்து... திருவிளையாட லில் என்னையே மிஞ்சிட்டீங்க பிரதர்! என்று உன்னைக் கட்டிப் பிடிச்சுப்பார்! என்றாய் சிரிப்பாக!
அவர் கட்டிப் பிடிச்சு என்ன ஆகப்போகுது. அதுக்குப் பதில் நீ என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோயேன்! என்றேன்.
ஓ... தாராளமா! என்று என்னை அப்படியே நெட்டித் தள்ளினாய். நான் பக்கத்திலிருந்த புல்லுக்கட்டின் மீது விழுந்தேன்.
அருகிலிருந்த புளிய மரத்தின் உச்சியில் அமர்ந்த படி ஆடாதடா... ஆடாதடா மனிதா! என்று உடுக்கையை அடித்தபடி பாடிக் கொண்டு இருந்தவர்... அட, நம்ம சிவபெருமான்!

எனக்கு லீப் வருடங்கள்
ரொம்பப் பிடிக்கும்
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு!

எல்லா உடைகளிலுமே
நீ கவிதைதான்
சேலை
உடுத்தினாலோ
தலைப்புடன்
கூடிய கவிதை!



நன்றி-தபூ சங்கர்

வந்தவர்கள்