My Places Click Here

  
இங்கு உள்ள அனைத்தும் பிற வலையுலக நண்பர்கள் எழுதியது . அவர்களுக்கு நன்றிகள் பல ...

Saturday, January 19, 2008

இதோ எந்தன் தெய்வம்..!



நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை.
உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, Ԕஉங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார்.
நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.
உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே நீ ஐயோ என்று முகத்தை மூடிக்கொண்டு, கோயில் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாய்.
நான்உன் அருகில்வந்து, நேரமாகிவிட்டது... வா, போகலாம்! என்றேன்.
நான் வரலை! என்று சிணுங்கினாய்.
ஐயையோ... நீ இங்கேயே இருந்துவிட்டால், இங்கிருக்கும் தெய்வம் எங்கே போவது? வேண்டுமென்றால் சொல்... இதைவிட அழகிய கோயிலாக, நான் கட்டித் தருகிறேன்!என்றேன்.
ஐயோ அப்பா... என்னைக் காப்பாத்துங்கப்பா! என்று கத்தியபடியே எழுந்து ஓடிப்போய், உன் தந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாய்.
உன் தந்தை போதும் என்று கண்டிப்புடன் சொன்னாலும், தன் பெண் நல்ல பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்கிற பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடியது.
நான் பெருமகிழ்ச்சி கொண்டு, கோயிலுக்குள் இருக்கும் தெய்வத்தைத் திரும்பிப் பார்த்தேன்.
தெய்வமோ, என் சந்நிதானத்தில் என்ன விளையாட்டு இது? என்பதுபோல் பொய்க்கோபம் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது.

நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவது தான்
எனக்குத் திருவிளையாடல்.



அற்புதமான காதலைமட்டுமல்ல
அதை உன்னிடம்சொல்ல
முடியாத அதி
அற்புதமானமௌனத்தையும்
நீதான் எனக்குத்தந்தாய்.
அன்று
நீ குடைவிரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழைநின்றால்
நீ எங்கோ
குடைவிரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.


தபூசங்கர்

1 comment:

Unknown said...

I do not understand this language, but the font and image very beautiful =))

வந்தவர்கள்