My Places Click Here

  
இங்கு உள்ள அனைத்தும் பிற வலையுலக நண்பர்கள் எழுதியது . அவர்களுக்கு நன்றிகள் பல ...

Saturday, January 19, 2008

வெட்கம்...



வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல், பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன். பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும், ??அய்யோ... கையை விடுங்க. வெக்கமா இருக்கு? என்று நெளிந்தாய்.
?வலிக்குதுனு சொல்லு! அதிலே நியாயம் இருக்கு... வெக்கமாத்தானே இருக்கு. அதுக்கு ஏன் கையை விடணும்? ஆமா, வெட்கப்படறது உனக்குப் பிடிக்காதா?? என்றேன். ?ம்ம்ம்... வெக்கப்பட எந்தப் பொண்ணுக்காவது புடிக்காம இருக்குமா?? என்றாய் வெட்கம் பொங்க.
?பிடிச்சிருக்குன்னா, ஏன் விடச் சொல்லணும்? அய்யோ... வெக்கமா இருக்கு. அப்படியே கையைப் பிடிச்சிட்டே இருங்கனுதானே சொல்லணும் நீ!? என்றேன்.
சிரித்து விலகிய நீ, ?அதெல்லாம் லூசுப் பொண்ணுதான் சொல்வா!? என்றாய்.
?அப்போ நீ லூசு இல்லையா?? என்றேன்.
?உங்கள...? என்று என்னை அடிக்க ஓடி வந்த உன் கையை மறுபடியும் பிடித்தேன். சிணுங்கிச் சிரித்துச் சிணுங்கி, வெட்க கீதம் பாட ஆரம்பித்தாய்.
??சொல்லு! ?அய்யோ வெக்கமா இருக்கு.. அப்படியே பிடிச்சுக்கோங்க!?னு சொல்லு!? என்றேன், உன் காதோரமாக. ?அய்யோ... காலங்காத்தால இந்த ராட்சசன்கிட்ட மாட்டிக் கிட்டேனே... யாராவது வந்து என்னைக் காப்பாத்துங்களேன்!? என்று கத்தினாய்... என்னைத் தவிர வேறு யாருக்கும் கேட்காத குரலில்!
??அய்யோ இந்தப் பொண்ணு என் கையைப் பிடிச்சு வம்பு பண்றாளே!?? திடீரென உலகத்துக்கே கேட்கும்படியாக நான் கத்தினேன். பயந்து விலகிய நீ, ?ச்சீ... பொறுக்கிடா நீ!? என்றாய் குறும்பான எரிச்சல் குரலில்.
?ஆமாம்! பொறுக்கியிலும் பொறுக்கி... ஒண்ணாம் நம்பர் பொறுக்கி! அதனால்தான் இந்த உலகத்தையே கலவரப்படுத்திய படித் திரிகிற ஆயிரக்கணக்கான தேவதைகளில் இருந்து, ஒண்ணாம் நம்பர் தேவதையான உன்னைப் பொறுக்கி எடுக்க முடிந்தது என்னால்!?? என்றேன்.
இப்போது நீ சொன்னாய். ?டேய், லூசாடா நீ??
நன்றி-தபூ சங்கர்

No comments:

வந்தவர்கள்